தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன

Friday, 22 March 2013 - 19:41

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9
ஜெனீவாவில் இலங்கை தொடர்பான விடயங்களுக்கு உரிய ஆதரவை வழங்க மத்திய அரசாங்கம் தவறியுள்ளதாக கூறி தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் மாணவர்களின் போராட்டம் நேற்று உச்ச கட்டத்தில் இடம் பெற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நுங்கம்பாக்கத்தில் இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றின் போது 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடிரென தமது கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேறி முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் வாசஸ்தலத்தினுள் பிரவேசித்தனர்
காவல்கடமையில் ஈடுபட்டிருந்த முதல் கட்ட காவல் அரண் அதிகாரியையும் மீறி அவர் அமைச்சரின் வீட்டுக்குள் பிரவேசிக்க எத்தணித்துள்ளனர்.
இருப்பினும், மேலதிக காவற்துறையினர் அழைக்கப்பட்டு  35  மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல, நகரத்தின் பல பகுதிகளில் இடம் பெற்ற வேறு ஆர்ப்பாட்டங்களின் போது 147 மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பச்சையப்பன் கல்லூரிக்கு முன்னால் மாணவர்கள், வீதி தடையை ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips