பொது மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் கருத்துக்களுக்கு தடைவிதிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அமைச்சர் வாசுதேவ நாணயகார இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் கருத்துக்கள் மற்றும் தூண்டல்களை தடை செய்வது தொடர்பான யோசனை ஒன்றை, அமைச்சரவையில் சமர்ப்பிக்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாட்டில் துளிர்விட ஆரம்பித்துள்ள சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தற்போது நாட்டில் காணப்படுகின்ற அடிப்படைவாத நிலைமைகள் தொடர்பில், மஹாநாயக்கர்கள் அவதானம் செலுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கட்சியின் பிக்குகள் முன்னணி இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
Follow US






Most Viewed Stories