இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்சித் பதவி விலக வேண்டும் என்று, தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்ட மன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மத்திய அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று அண்மையில் சல்மன் குர்சித் தெரிவித்திருந்தார்.
அத்துடன் ஏனைய மாநிலங்களின் நிலைப்பாட்டை அறியாமல், தமிழகத்தின் கோரிக்கை அடிப்படையில் மாத்திரம் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர முடியாதுஎன்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்களை கண்டித்துள்ள பழ நெடுமாறன், சல்மான் குர்சித் வரலறு தெரியாமல் பேசுவதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர்களான ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திராகாந்தி போன்றோர், இஸ்ரேல் - பாலஸ்தீன் மோதலின் போது யசீர் அரபாத்துக்கு ஆதரவளித்தமை, பங்களாதேஸ் விடுதலைப் போரில், சேக் முஜிபுர் ரஹ்மானுக்கு ஆதரவளித்தமை போன்ற சந்தர்ப்பங்களில் மாநிலங்கள்அவையின் அனுமதியை கோரிஇருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஏன் இந்தியாவினால் இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வர முடியாது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே இந்தியாவின் வரலாறு தெரியாத சல்மான் குர்சித், அந்த பதவிக்கு பொறுத்தமானவர் இல்லை என்றும் பழ நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
Follow US






Most Viewed Stories