த.தே.கூட்டமைப்பு கோரிக்கை

Sunday, 31 March 2013 - 13:44

%E0%AE%A4.%E0%AE%A4%E0%AF%87.%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் சுயாதீன விசாரணைக்கான பொறிமுறை ஒன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரியுள்ளது.

அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரனை மேற்கோள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. 

யுத்தம் நிறைவடைந்த பின்னரும், அதற்கு முன்னர் பலர் காணாமல் போயுள்ளனர்.

எனினும் யாரும் அவ்வாறு காணாமல் போகவில்லை என்று இராணுவம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் சரியான முறையில் செயற்படும் என்ற நம்பிக்கை இல்லை.

எனவே இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு, நீதியான விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories


Exclusive Clips