சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர் பீட கூட்டம் நேற்றிரவு அவசரமாக கூட்டப்பட்டிருந்தது.
எனினும் இந்த கூட்டத்தில் முக்கியமான ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொள்ளமை குறித்து, சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர் பீட கூட்டம் நேற்று கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற போது, அதில் பொது செயலாளர் ஹசன் அலி மற்றும் தவிசாலர் பசீர் சேகுதாவும் ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர்.
எனினும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இதில் கலந்துக் கொண்டிருக்கவில்லை என்று கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை நேற்று இரவு ஏழு மணியில் அதிகாலை 1.30 வரையில் இந்த அவசர கூட்டம் நடத்தப்பட்டும், எந்த தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
அண்மைக்காலமாக சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெறுகின்ற வன்முறைகள் தொடர்பில், எவ்வாறு செயல்படுவது என்பது தொடர்பில் நேற்று கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விடயத்தை அரசாங்கத்தில் இருந்தபடியே சமாளிப்பதா? அல்லது அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்ப்பை வெளிப்படுத்துவதா என்பது தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.