சில தினங்களுக்கு முன்னர் பெப்பிலியான பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பல கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.
பெப்பிலியான பிரதேசத்தில், தனியார் விற்பனை நிலையம் தாக்குதலுக்கு உள்ளான சம்பவத்திற்கும் தமது அமைப்பிற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
அமைப்பின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்தார்.
களனி பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதனிடையே, நாட்டு மக்களிடத்து அவநம்பிக்கை ஏற்படும் போது அதனை களைந்து மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ச அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, பொதுபல சேனா அமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.
பெப்பிலியானவில், ஆடை விற்பனை நிலையம் ஒன்று தாக்குதலுக்கு உள்ளான போது, அங்கிருந்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தவறியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
Follow US






Most Viewed Stories