வடமாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு முன்னர் சுயாதீன ஆணைக்குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
கல்குடாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரைறயாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வடக்கில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள எதிர்தரப்பினர் முகம் கொடுக்கும் சவால்களுக்கு முகம் கொடுப்பதற்காக இவ்வாறான ஆணைக்குழு அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டத்தின் போது ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்ட போதிலும் அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வட மாகாணத்தில் சாதாரண அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது உள்ளது.
இந்த நிலையில், சுயாதீன ஆணைக்குழுவை அமைத்ததன் பின்னரே அங்கு தேர்தல் நடத்துவது பொருத்தமாக இருக்கும் எனவும் எதிர்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
Follow US






Most Viewed Stories