பொது நலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்த கூடாது என்று தமிழக முன்னாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ட்ரஸ்ட் ஒப் இந்தியா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் நேற்றைய தினம் பொதுநலவாய நடவடிக்கைக் குழுவில் இடம் பெற்றுள்ள நாடுகள் அனைத்தும் இதனை ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் இடம்பெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு கூட்டத்தில், இது தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இதற்கான முன்னெடுப்புகளில் தமது கட்சி ஈடுப்படும் எனவும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.