8 வீதமானவர்களுக்கு புற்றுநோய்

Tuesday, 23 April 2013 - 9:17

8+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D

இலங்கை சனத்தொகையில் சுமார் 8 வீதமானவர்கள் பல்வேறு புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

வருடந்தோறும் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தினால் அதிகரித்து வருவதாகவும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலத்திரனியல் கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் அவை நீரோடு கலப்பதாலேயே புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கான காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலத்திரனியல் கழிவுகளை உரிய முறையில் கையாழ்வது தொடர்பில் அனைத்து வைத்தியசாலைகளுக்கும் புதிய சுற்றுநிருபமொன்று அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் நிஹால் ஜயதிலக குறிப்பிட்டுள்ளார்.

Exclusive Clips