பாரிய போராட்டத்திற்கு தமிழக மீனவர்கள் தயார்

Tuesday, 23 April 2013 - 14:12

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

இலங்கையில் சிறையிலடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 30 பேரையும் விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தங்கச்சிமடம் அருகே, நேற்று இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல மீனவ அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டகாரர்கள், ராமேஸ்வர மீனவர்களை விடுதலை செய்ய மத்திய மற்று மாநில அரசாங்கங்கள் உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர் கடந்த 6 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இவர்கள், கடந்த 18ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்;ட போது, இவர்களை எதிர்வரும் 26 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, இவர்கள் 26 ஆம் திகதி விடுதலை செய்யப்படாவிட்டால், 27ஆம் திகதி சாலை மறியல் போராடம் மேற்கொள்ளப்படும்.

அத்துடன், 30ஆம் திகதி காலவரையற்ற போராட்டம் ஒன்றையும் மேற்கொள்ள போவதாக மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இருவர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் நேற்று மாலை ராமேஸ்வரம் சென்றடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Exclusive Clips