வடக்கு தேர்தலுக்கு அரசின் பங்காளிகள் எதிர்ப்பு

Tuesday, 23 April 2013 - 14:11

%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

இந்த முறை தொழிலாளர் தின நிகழ்வுகளை கூட்டமைப்பு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய சுதந்திர முன்னணி மற்றும் இடதுசாரி கட்சிகள் தனித்தனியோ நடத்துவதற்காக ஒழுங்குகளை மேற்கொண்டு வருகின்றன.

இதன்படி தேசிய சுதந்திர முன்னணி கொழும்பு மாளிகாவத்தையில் தமது மே தின கூட்டத்தை, அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் நடத்தவுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்ற அமைச்சர் விமல் வீரவன்ச, அரசாங்கம் வடமாகாண தேர்தலை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே தாம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக குறிப்பிட்டார்.

[MP3]t57668[/MP3]

தமிழீழத்தை அமைப்பதற்கு சர்வதேசத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை நாட்டுக்கு தெளிவுப்படுத்துவதற்காகவே தமது கட்சிஇந்த முறை மே தினத்தை ஒழுங்கு செய்துள்ளது. தெமட்டகொட சந்தியில் இருந்து சென் ஜோம்ஸ் கல்லூரி வரையில் எதிர்பு பேரணி ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, அரசாங்கத்தின் பிரதான இடதுசாரி கட்சியும் தனியாக, கொழும்பு ஹென்றி பீரிஸ் பகுதியில் தமது மே தின நிகழ்வுகளை நடத்தவுள்ளது.

அரசாங்கத்தின் வலது சாரி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே தாம் தனியே மே தினத்தை ஒழுங்கு செய்துள்ளதாக சமமாசாஜ கட்சியின் தலைவர் அமைச்சர் திஸ்ச வித்தாரண குறிப்பிட்டுள்ளார்.

Exclusive Clips