மின்கட்டணத்தை குறைக்க மாற்று யோசனை

Tuesday, 23 April 2013 - 14:11

%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88


வீட்டு மின்பாவனை பொருட்களில் அதிகளவில் மின்சாரத்தை உள்வாங்கும் பொருளாக குளிசாதன பெட்டி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார கட்டண பட்டியலில் 50 சதவீதத்தமான தொகையை குளிர்சாதன பெட்டியே பெறுவதாக மாற்று சக்திவலு அதிகார சபையில் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் எம் எம் ஆர் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

குளிர்ச்சாதன பெட்டியினால் ஏற்படும் செலவீனத்தை மட்டுப்படுத்தி கொள்ள, தேவையற்ற பொருட்களை அதனுள் களஞ்சியப்படுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், தேவையற்ற மின்மிளக்குகள், மின்விசிறி என்பவற்றை நிறுத்தி வைப்பதை விட, மின்சார கட்டண பட்டியலுக்கு அதிகம் தாக்கம் செலுத்தும் மின்பாவனை பொருட்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவது சிறந்ததாககும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, உயர்வடைந்துள்ள மின்சார கட்டணம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி இன்று நாடாளுமன்றில் தமது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளதாக எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

Exclusive Clips