மின்சார கட்டண அதிகரிப்பு - ஆர்ப்பாட்டம்

Tuesday, 23 April 2013 - 19:57

%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+-+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
மின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஏற்பட்ட தீவிரநிலை காரணமாக நாளை பிற்பகல் 1 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற விவாதத்தின் போது எதிர்கட்சியினர் தொடர்ந்தும் குழப்ப நிலைமையை தோற்றுவித்தமையே இதற்கான காரணம் என்று எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் இன்றைய தினம் மின்சார கட்டண உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

மத்திய மாகாண சபை கட்டிடத்தின் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் எதிர்கட்சி தலைவரான கே கே பியதாச தலைமையில் நடைபெற்றது.

இதில் பல உறுப்பினர் தீ பந்தங்களை ஏந்தியிருந்தமை குறிப்பிடதக்கது.

இதுதவிர, ஹொரனை, எல்பிட்டி ஆகிய பிரதேச சபை எதிர்;கட்சி உறுப்பினர்களும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்..

Exclusive Clips