ஏற்ற உணவுகளை இறக்குமதி செய்யுங்கள்

Tuesday, 23 April 2013 - 20:00

%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
மனித உடலுக்கு ஏற்ற உணவுகளை மாத்திரம் இறக்குமதி  செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சு உணவு இறக்குமதியாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

இந்த ஆலோசனையை சுகாதார அமைச்சின் உணவு பரிசோதனை பிரிவு வழங்கியுள்ளது.

தமிழ் சிங்கள புதுவருடத்தின் போது விற்பனை செயற்வதற்காக கொண்டு வரப்பட்ட உணவு பொருட்களில் மனித உடலுக்கு தீங்கு ஏற்படக் கூடிய உணவுப் பொருட்கள் அடங்கியிருந்தாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

பருப்பு, கடுகு, உள்ளிட்ட ஏராளமான பொருட்களில் கழிவுப் பொருட்கள் அடங்கியிருந்தாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு இனங் காணப்பட்ட பொருட்களை மீண்டும் கப்பலேற்றுமாறு சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் சுங்க பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips