3 பேர் கைது

Tuesday, 23 April 2013 - 20:01

3+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
சட்டவிரோதமாக  10 தங்க காப்புக்களை வைத்திருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள், கட்டுகஸ்தோட்டை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் ஒரு ஆணும் அடங்குவதாக அந்த அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள், கொட்டாஞ்சேனை, கொட்டிகாவத்தை, பத்தரமுல்ல, கட்டுபெத்த மற்றும் ஹோமாகம ஆகிய பிரதேச வங்கிகளில் நகை அடகு வைத்து நிதிகளை பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சுமார் 11 லட்சத்திற்கும் அதிகமான நிதிகளை இவர்கள் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exclusive Clips