காதல் விவகாரத்தால் மாணவர்கள் உயிரிழப்பு

Wednesday, 24 April 2013 - 8:26

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
தமது காதலிக்கு விஷத்தைக் கொடுத்து கொலைச் செய்த இளைஞர் ஒருவர், விஷ ஊசியை தமது உடலில் ஏற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் கல்விபயிலும் மாணவியும், ராகம மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் மாணவனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கண்டி – மாரஸ்சன்னவைச் சேர்ந்தவரான மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் தொழிநுட்ப பிரிவில் கல்வி கற்றுவந்த 22 வயதான குறித்த யுவதி, தமது காதலன் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளார் என்று கருதி அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டுள்ளார்.

நிலையில் கண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் முழுமையாக தேறிய நிலையில், வீடு திரும்புவதற்கு ஆயத்தமான நிலையில் இருந்துள்ளார்.

இதன்போது அங்கு வந்த அவரது காதலன், விஷம் கலந்த பாலை குடிக்கச் செய்துள்ளார்.

இந்தநிலையில், மீண்டும் ஆபத்தான நிலைக்குச் சென்ற அவரை உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றுயுள்ளனர்.

எனினும் இறுதியில் சிகிச்கை பயனளிக்காது போக அவர் உயிரிழந்தார்.

இதனை அடுத்து ராகம மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் இளைஞன், விஷ ஊசியை ஏற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்வம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exclusive Clips