வீதி விபத்து - நாளுக்கு ஐந்து பேர் வீதம் பலி

Wednesday, 24 April 2013 - 8:37

%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
வீதி விபத்துகளில் நாளொன்றுக்கு ஐந்து பேர் வீதம் பலியாவதாக போக்குவரத்து காவல்துறை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

ஜனவரி மாதம் தொடக்கம் கடந்த 19ஆம் திகதிவரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற வீதிவிபத்துக்களில் 628 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த காலப்பகுதியில்  9 ஆயிரத்து 815 வீதி விபத்துக்கள் இடம்பெற்றிருப்பதாகவும் போக்குவரத்து காவல்துறை தலைமையம் குறிப்பிட்டுள்ளது.

இதன்போது ஆயிரத்து 380 பேர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துக்களில் மோட்டர் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் பயணித்தவர்களே அதிகளவில் பலியாகியுள்ளனர்.

கடந்த வருடம் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் ஆயிரத்து 500 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exclusive Clips