விசேட நாடாளுமன்ற குழு கூட்டம்

Wednesday, 24 April 2013 - 8:27

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
நாடாளுமன்றம் அவசரமாக ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் எதிர் கட்சி தலைவரின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று முற்பகல் 12 மணியளவில் இடம்பெறவுள்ளது.
எதிர் கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோன் அமரதுங்க இவ்வாறு குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற கட்டடத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இன்று இடம்பெறும் இந்த கலந்துரையாடலில் போது, மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் தமது கட்சி மேற்கொள்ளவுள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்படும் எனவும் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டார்.
மின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் நேற்று நாடாளுமன்றில் குழப்பநிலை ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகள் இன்று மதியம் வரையில், சபாநாயகரினால் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exclusive Clips