நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரிப்பு

Tuesday, 21 May 2013 - 8:27

%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
அதிக மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, நேற்றைய தினம் ஆறு மாவட்டங்களில் சில இடங்களில் மண்சரிவு அபாயம் தொடர்பில் இடர் முகாமைத்துவ அமைச்சு விடுத்த எச்சரிக்கை எதிர்வரும் 12 மணி நேரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை, காலி, களுத்துறை, பதுளை, நுவரஎலிய மற்றும் ரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பிரதேசங்களிலேயே இதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நாடளாவிய ரீதியாக தற்போது உள்ள காலநிலை சீர்கேடு படிப்படியாக குறைவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக கால நிலைய அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

எனினும், இடைக்கிடையே ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்யும் என்று காலநிலைய அவதான நிலையத்தின் அதிகாரி சின்னையா வசந்தகுமார் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

[MP3]t59363[/MP3]


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips