சிறிய ரக எரிவாயு கொள்கலன்களுக்கு தடை

Sunday, 14 July 2013 - 20:25

+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B0%E0%AE%95+%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88+




பீகார் மாநிலத்தில் சிறிய ரக எரிவாயு கொள்கலன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் புத்தகயாவில் ஏற்பட்ட அசம்பாவிதத்தை அடுத்து  மாநில அரசாங்கம் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கான உத்தரவை உணவு மற்றும் குடிமைப் பொருட்கள் வழங்கு துறை அமைச்சர் ஷியாம் ராஃக் பிறப்பித்துள்ளார்.
முன்னதாக அமைச்சர் இது குறித்து கனியவள நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தியிருந்தார்.
இதனிடையே, புத்த கயாவுக்கு, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வலியுறுத்தி, பௌத்த  துறவி ஒருவர், நேற்று முதல் காலவரையற்ற உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

பௌத்த மதத்தினரின் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான, 2,550 ஆண்டுகள் பழமை வாய்ந்த, புத்த கயா கோவில் வளாகத்தில், கடந்த 7ம் திகதி தொடர்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

அந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது, இன்னமும் கண்டறியப்படாத நிலையில், கோவில் மற்றும் வளாகத்திற்கு, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை வலியுறுத்தி, 60 வயதான வந்தே புத் சாகர், பௌத்த துறவி, காலவரையற்ற உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொள்கின்றார்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips