வெகுமதியளிக்கும் “செலான் திலின சயுர”

Tuesday, 20 October 2015 - 16:17

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E2%80%9C%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E2%80%9D

வெளிநாட்டு நாணய நிலையான நிலையான கணக்குகளுக்கு வட்டி வருமானத்தைப் பெற்றுக் கொள்ளுவது மட்டுமின்றி வைப்பாளர்களுக்கு பணரீதியான மற்றும் பணரீதியற்ற அனுகூலங்களை “செலான் திலின சயுரத்” திட்டம் வழங்குகின்றது. அன்புடன் அரவணைக்கும் வங்கியான செலான் வங்கிஇ தனது வர்த்தக உறுதிமொழிக்குப; ஏற்ப தமது வாடிக்கையாளரின் நாடித்துடிப்பை அறிந்து சிரத்தையுடன் வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கையருக்கு பெரு வாரியான அனுகூலங்களை வழங்கும் ஒரே வங்கியாகத் திகழ்கின்றது.

பிரிட்டன், கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இத்தாலி, சுவீடன், சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலுள்ள இலங்கையின் புலம்பெயர்ந்தோருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிக்கு அமைவாக இரு நாடுகளிலும் சிறந்த பலனைப் பெற செலான் வங்கி வழிசமைத்துள்ளது.

கணக்கில் உரிய மீதியைத் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு தமது செலான் NRFC அல்லது SFIDA கணக்குகளில் பேணுவோர் வங்கியின் அனுகூலங்களை அனுபவிப்பதோடு இரட்டைப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க உரித்துடையவர் ஆவர்இலங்கை மத்திய வங்கியின் 2014ற்கான ஆண்டறிக்கையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிமித்தம் நாட்டை விட்டு சென்றோரின் மொத்த எண்ணிக்கை 2013ஐக் காட்டிலும் 2.5%ஆல் அதிகரித்து  குறிப்பிடத்தக்க  வளர்ச்சியைக்  காட்டியுள்ளது.

இவ்வறிக்கை மேலும் குறிப்பிடுகையில் விசேட திறன் தொழிலாளர், தொழில்வல்லுனர்கள் மற்றும் இடைத்தர, விசேட திறனற்ற தொழிலாளர் ஆகிய பிரிவுகளும்  வளர்ச்சியைக் காட்டியுள்ளது.இவ்வளர்ந்து வரும் போக்கை அவதானித்து செலான் வங்கி தனது NRFC நிலையான வைப்புக் கணக்குகளை 1 வருடத்திலிருந்து 5 வருடங்களுக்கு நீடித்துள்ளதுடன் முதிர்வின் போதான சராசரி வட்டி வீதம் 4.25% ஆகவும், மாத முதிர்வு வட்டி வீதம் 3.75% ஆகவும் வழங்கப்படுகிறது. மேலும் தமது சேமிப்பு அல்லது நிலையான வங்கிக் கணக்கில் அமெரிக்க டொலர் 500ஐ அல்லது அதற்கு சமனான வேறு நாணயங்களில் குறைந்தது 6 மாதங்களுக்கு பேணுவோர் ரூ.1 மில்லியன் வரையான ஆயுள் காப்புறுதியை பெற உரித்துடையவர் ஆவர்.

மேலதிகமாக, தமது கணக்கில் அமெரிக்க டொலர் 25,000ஐ  மீதியாகப்  பேணுவோர் விடுமுறை ஹோட்டல் பக்கேஜ் ஆக நட்சத்திர அந்தஸ்து உள்ள விடுதியில் இருவருக்கான ஒரு நாள் கரடட டிழயசன தங்குமிட வசதியைப் பெறுவர். மேலதிகமாக கணக்கு வைப்பாளர்கள் தமது வாழ்க்கையின் முக்கிய தருணங்களில் பின்வரும் நன்மைகளைப்  பெறுவர். தமது கணக்கின் மீதியைப் பொறுத்து திருமணத்தின் போது அதிகப்படியான தொகையாக ரூ.40,000ம் மகப்பேறின் போது ரூ.35,000 ம் கண்புரை சத்திரசிகிச்சைக்கு ரூ.25,000ம் சத்திரசிகிச்சைக்காக அதிகப்படியாக ரூ. 100,000ம் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகக் கட்டணத்தில் ரூ.10,000ம் வழங்கப்படும்.இவ்வெகுமதித் திட்டம் தொடர்பாக செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் பிரத்தியேக வங்கியியல் பிரதிப் பொது முகாமையாளர் திரு. டிலான் விஜயசேகர கருத்துத் தெரிவிக்கையில் “புலம்பெயர் தொழிலாளர்களின் துன்பங்களை அறிந்து அவர்களின் கஷ்டங்களை உணர்ந்து அதை கௌரவிக்க நாம் தயாராகவுள்ளோம். இலங்கையின் வேலை செய்யும் சனத்தொகையின் 15% ஆனோர் வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர். இதனடிப்படையில் நாட்டின் அந்நிய செலவாணியை ஈட்டித் தருவதில் முக்கிய பங்கு வகிப்போரை  வெகுமதியளிக்க வங்கி இம்முயற்சியில் இறங்கியுள்ளது. இவ் வெகுமதித் திட்டம்.

வெளிநாடுகளில் சாதாரண வேலைகளில் ஈடுபடுவோர்  மற்றும்  உயர் தொழிலில் ஈடுபடும் இரு சாராருக்கும்  வெகுமதி அளிக்கிறது.”   செலான் வங்கி வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கான வட்டி வருமானம் ஈட்டும் வைப்புக் கணக்கான விசேட வெளிநாட்டு முதலீட்டு வைப்புக் கணக்கை ஆரம்பிக்கும் வாய்ப்பையும்  வழங்குகின்றது.கணக்கு உரிமையாளரின் விருப்பத்திற்கமைய, கணக்கில் பராமரிக்கப்படும் நாணயத்தை எந்தவொரு நியமிக்கப்பட்ட நாணய  அலகிற்கும் பரிவர்த்தனைத் தேவைக்காக மாற்ற முடியும். தமது கணக்கில் அமெரிக்க டொலர் 25,000 மீதியையோ அதற்குசமனான தொகையைப் பேணுவோர் மேற்கூறிய ஹோட்டல் பக்கேஜ்ற்கு இரு வருடத்திற்கு ஒரு முறை தகுதியுடையவர் ஆவர்.