தேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்க நடவடிக்கை

Saturday, 07 November 2015 - 18:46

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+
தேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்கும் நோக்கில் ஏலத்திற்கு வரும் மேலதிக தேயிலையை கொள்வனவு செய்ய இலங்கை தேயிலை சபை முன்னிலையாகியுள்ளது.

தேயிலை தொழிற்துறை தரப்பினர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அண்மையில் நடத்திய கலந்துரையாடலின் பிரதிபலனாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேயிலை விலை வீழ்ச்சியடைவதன் காரணமாக பாதிக்கப்படும் சிறு தேயிலை தோட்ட உற்பத்தியாளர்களின் வருமானத்தை நிரந்தரமாக்குவதே இதன் பிரதான நோக்கமாகும்.

இதற்கமைய, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ஏலத்தில் விடப்படும் தேயிலையை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தேயிலையை அதிகளவில் கொள்வனவு செய்யும் ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் கேள்வி குறைந்தமை மற்றும் உலக சந்தையில் தேயிலை விலையின் வீழ்ச்சி என்பனவே தேயிலை விலை குறைவிற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.