இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

Saturday, 17 August 2019 - 7:54

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+
ஜுலை மாதம் இலங்கையின் உற்பத்தி செயற்பாடுகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உற்பத்தி நடவடிக்கைகள் மேலும் உயர்ந்த வீதத்தில் விரிவடைந்து 55.7 கொண்ட பெறுமதிச் சுட்டெண்ணை ஜுலை மாதம் பதிவுசெய்துள்ளது.

ஜுன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.8 சுட்டெண் புள்ளிகளைக் கொண்டதொரு அதிகரிப்பாகும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உற்பத்தித் துறையில், குறிப்பாக உணவு மற்றும் குடிபானத் துறையின் தயாரிப்பில் ஏற்பட்ட அதிகரிப்பே இதற்கான முக்கிய காரணமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.