வடமாகாணத்தில் உள்ள 15 குளங்களை புனரமைக்க நடவடிக்கை

Wednesday, 18 September 2019 - 20:23

%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+15+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
வடமாகாணத்தில் உள்ள 15 குளங்கள் புனரமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் ஆளுநரின் செயலகத்தில் நேற்றுஇடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் போது ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் 3 குளங்களாக மொத்தம் 15 குளங்கள் புனரமைக்கப்படுவது தொடர்பில் ஆராயப்பட்டது.

இந்த குளங்களின் புனரமைப்பிற்கு தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சினால் முதற்கட்டமாக 11.65 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குளங்களை ஆழப்படுத்தல், அகலப்படுத்தல் மற்றும் மண் அகழ்ந்தெடுத்தல் ஆகிய செயற்பாடுகளின் பின்னர் விவசாயிகளின் பாவனைக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.