அதிகாலை 5 மணிக்கு திறப்பு

Thursday, 19 September 2019 - 8:44

%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+5+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சிகிரியாவை, எதிர்வரும் 27 ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கென திறப்பதற்கு மத்திய கலாச்சார நிதியம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் அதிகாலையில் பிதுரங்கலகல பகுதிக்கு சூரிய உதயத்தை பார்வையிடுவதற்காக செல்வார்கள் என்பதனால், சூரிய உதயத்தை பார்வையிடுவதற்கு சுற்றுலா பயணிகளுக்கு சந்தர்ப்பதை ஏற்படுத்திக் கொடுப்பதே இதன் நோக்கமாகும் என்று மத்திய கலாச்சார நிதியத்தின் சிகிரியா திட்ட முகாமையாளர் மேஜர் அனுர நிஷாந்த தெரிவித்துள்ளார்.

வழமைபோன்று சிகிரியாவை பார்வை இடுவதற்கான அனுமதி சீட்டு காலை 6 மணி தொடக்கம் மாலை 5 மணி வரையிலான காலப்பகுதியில் விநியோகிக்கப்படும்.

இந்த நிலையில், உலக சுற்றுலா தினத்தன்று உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அதிகாலை 5 மணி தொடக்கம் சிகிரியாவில் சூரிய உதயத்தை பார்வையிடுவதற்கான அனுமதி சீட்டு விநியோகிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் என அரசாங்க தகவல் இணையதளம் தெரிவித்துள்ளது.