'உலக பயண சந்தை 2019' நிகழ்வில் இலங்கை தொடர்பில் பிரசாரம்

Friday, 20 September 2019 - 21:39

%27%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+2019%27+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
எதிர்வரும் நொவம்பர் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி லண்டனில் நடைபெறவுள்ள 'உலக பயண சந்தை 2019' நிகழ்வின் போது, அதிக அளவிலான சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு கொண்டு வரும் நோக்கில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியாக பல நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தரப்பினர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதற்கான நடவடிக்கைகளையும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம் தற்போது மேற்கொண்டு வருகின்றது.

வருடா வருடம் நடைபெறும் இந்த சுற்றுலா வர்த்தக துறை நிகழ்வில் சர்வதேச சுற்றுலா பயண அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள், சுற்றுலா துறையுடன் சம்பந்தப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அதிக வசதி வாய்ப்புக்களை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சர்வதேச சுற்றுலா துறையுடன் சம்பந்தப்பட்டவர்கள் வருடாந்தரம் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வர்த்தகத்தினை பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா தரப்பினர் கடந்த பல வருடங்களாக 'உலக பயண சந்தை 2019' நிகழ்வில் கலந்து கொள்வதுடன், இலங்கையின் சுற்றுலா தலங்கள் மற்றும் இலங்கை தொடர்பான முழு விபரங்களை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தி வருகின்றது.

இது தவிர, இந்த வருட நிகழ்வின் போது இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம் எண்மான முறைமையில் இலங்கையின் சுற்றுலா குறித்த பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பணியகத்தின் நிர்வாக இயக்குனர் சாமரி மாஎல்கே தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்த வருடத்தின் ஓகஸ்ட் மாதம் வரையில், பிர்த்தானியாவில் இருந்து ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 646 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் பணியகத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.