அதிக சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள உலக பயண சந்தை..?

Saturday, 21 September 2019 - 8:02

%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88..%3F
லண்டனில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள “உலக பயண சந்தை 2019” நிகழ்வின்போது, அதிக அளவிலான சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு கொண்டு வரும் நோக்கில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வானது நவம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

சர்வதேச ரீதியாக பல நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தரப்பினர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதற்கான நடவடிக்கைகளையும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம் தற்போது மேற்கொண்டு வருகின்றது.

வருடாந்தம் நடைபெறும் இந்த சுற்றுலா வர்த்தக துறை நிகழ்வில் சர்வதேச சுற்றுலா பயண அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள், சுற்றுலா துறையுடன் சம்பந்தப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அதிக வசதி வாய்ப்புக்களை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சர்வதேச சுற்றுலா துறையுடன் சம்பந்தப்பட்டவர்கள் வருடாந்தரம் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வர்த்தகத்தினை பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.