உலக சுற்றுலா தினம் இலங்கையில் கொண்டாட்டம்..

Sunday, 22 September 2019 - 8:43

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D..
உலக சுற்றுலா தினத்தை எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இலங்கையில் கொண்டாடவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார தெரிவித்துள்ளது.

அந்த சபையின் இயக்குனர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.

அந்நிய செலாவணியினை ஈட்டிக் கொடுக்கும் மூன்றாவது தரத்தில் இலங்கை சுற்றுலாத்துறை திகழ்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பொருளாதாரத்திற்கு சுற்றுலாத்துறை மூலம் 480 கோடி அமெரிக்க டொலர் வருமானமாக கிடைக்க பெறுகின்றது.

இதனை மேலும் மேம்படுத்த அதிகார சபை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சுற்றுலா தினத்தை இலங்கையில் கொண்டாடுவதன் மூலம் இலங்கை மக்களுக்கு சுற்றுலாத்துறை குறித்து போதிய தெளிவை பெற்று கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இலங்கை கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பில் அங்கத்துவத்தை பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட சுற்றுலா தினத்தை இலங்கை உட்பட 38 நாடுகள் கொண்டாடுகின்றன.

இலங்கையில் நடைபெறும் பிரதான நிகழ்வு எதிர்வரும் 27 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் இலங்கையின் 9 மாகாணங்களை சேர்ந்த ஆளுனர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இது தவிர, சகல மாகாணங்களை சேர்ந்த கலாச்சார மற்றும் உணவு வகைகளை வெளிப்படுத்தும் கண்காட்சி ஒன்றும் இடம்பெறவுள்ளது.

அத்துடன் 43 காட்சியகத்தை கொண்ட கண்காட்சியில் 20 காட்சியகம் இலங்கை உணவு வகைகளை காட்சிப்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபவத்தில் சுற்றுலா தொடர்பான கருத்தரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.