இலங்கை ஜேர்மனிய தொழில்நுட்ப கல்லூரிக்கு ஜேர்மனிய ஸ்ராசன் குரூப் இடமிருந்து 110 மில்லியன் நன்கொடை

Sunday, 22 September 2019 - 13:23

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+110+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88
இலங்கை ஜேர்மனிய தொழில்நுட்ப கல்லூரிக்கு ஜேர்மனிய ஸ்ராசன் குரூப் இடமிருந்து 110 மில்லியன் ரூபாய் பெறுமதியான தொழில்நுட்ப உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

இந்த நன்கொடைகளை கிளிநொச்சியில் ஜேர்மனியின் ஒத்துழைப்புடன் புதிதாக தொடங்கப்பட்ட இலங்கை ஜேர்மனிய தொழில்நுட்ப கல்லூரியானது (SLGTI) 110 மில்லியன் ரூபா பெறுமதியான தொழில்நுட்ப உபகரணங்களை நன்கொடையாக பெற்றுக்கொள்கின்றது.

ஸ்ராசன் குரூப் மற்றும் சர்வதேச கூட்டுறவுக்கான ஜேர்மனிய சமூகக் கூட்டுறவனதும் (GIZ) பங்குடமை ஒப்பந்தத்தின் பலனாக இந்த தொழில்நுட்ப பயிற்சி உபகரணங்கள், ஒன்றிணைந்த வர்த்தகக்கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி அமைச்சின் சார்பாக (BMZ) நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

இது தொழில்துறை மற்றும் TVET நிறுவனங்களுக்கு இடையேயான நெருங்கிய சமூக தொழில் பங்காண்மையை விளக்குகிறது.

SLGTI க்காக வடிவமைக்கப்பட்ட தொழில்பயிற்சி உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக ஸ்ராசன் குரூப் தலைவர் ஹரி ஜயவர்தன மற்றும் ஜேர்மனியத் தூதுவர் திரு ஜோன் றோடே, SLGTI மாணவர்களிடம் செப்டெம்பர் 18 ஆம் திகதி கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.