எதிர்வரும் 5 வருடத்துக்குள் தொழில்வாய்ப்புக்களை அதிகரிக்க திட்டம்

Sunday, 22 September 2019 - 18:59

%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+5+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
எதிர்வரும் 5 வருடத்துக்குள் தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கும் மக்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் முன்னுரிமை வழங்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கண்டி மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்களில் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விஷேடமாக உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் ஐந்து வருட காலப்பகுதியினுள் தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்குமான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.