பலாலி விமான நிலையத்தின் முதலாவது சேவை இம்மாத நடுப்பகுதியில்...

Sunday, 13 October 2019 - 13:21

%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...
பலாலி வாநூர்தி தளத்தின் பெயர் யாழ்ப்பாண வாநூர்தி சர்வதேச தளம் என மாற்றப்பட்டுள்ள நிலையில், முதலாவது வர்த்தக ரீதியிலான சேவை இந்த மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

வாநூர்தி தளத்தின் அடிப்படை வசதிகள் அனைத்தும் சர்வதேச தரத்தை கொண்டுள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் சேவைகள் பகல் நேரத்திலேயே இடம்பெறவுள்ளன.

ஓடுபாதை மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களுக்கான மின்விளக்குகள் அமைக்கப்பட்டதன் பின்னர் 24 மணிநேர சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

தீர்வையற்ற விற்பனை நிலையங்கள் உட்பட ஏனைய வாநூர்தி தளங்கள் கொண்டுள்ள வசதி வாய்ப்புக்கள் யாழ்ப்பாண வாநூர்தி நிலையத்தில் பெற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், இந்த தளத்துடனான சேவைகளை மேற்கொள்ள சில இந்திய வாநூர்தி நிறுவனங்கள் தமது விருப்பத்தை ஏற்கனவே தெரிவித்துள்ளன.

இரண்டு ஆயிரத்து 300 மீற்றர் நீளமான ஓடுபாதையின் 950 மீற்றர் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் அகலம் 45 மீற்றர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் கட்டத்திற்கு அமைய புதுப்பிக்க ஓடுபாதையில் 80 ஆசனங்களைக் கொண்ட வாநூர்திகளே சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இரண்டாம் கட்டத்தின் போது 150 ஆசனங்களைக் கொண்ட ஏ320 ரக வாநூர்திகள் சேவைக்கு உட்படுத்தப்படும்.

மூன்றாம் கட்டத்தின் போது 200 ஆசனங்களைக் கொண்ட வாநூர்திகளும் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

இதற்கமைய ஏ320, போயிங் 737, ஏ318 மற்றும் ஏ319 ரக வாநூர்திகள் சேவைகளை மேற்கொள்வதற்கான வசதிகளை முற்றாக பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.