அமைச்சரவை அங்கீகாரம்

Thursday, 17 October 2019 - 13:54

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
அரச கடன் முகாமைத்துவ குழு ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

இலங்கை கடன் முகாமைத்துவம் தொடர்பில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதுடன், அந்த பணிக்காக தனியான நிறுவனம் ஒன்று இருப்பதன் தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக அரச முகாமைத்துவத்திற்காக அரச முகாமைத்துவம் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நிதி அமைச்சின் கீழ் ஸ்தாபிப்பதற்காக கொள்கை ரீதியில் அனுமதியை பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், அரச கடன் முகாமைத்துவ சட்ட திருத்தம் ஒன்றை மேற்கொள்வதற்கும் உத்தேச செயலகத்தை அமைப்பதற்கான நிறுவக கட்டமைப்பு ஒன்றை அபிவிருத்தி செய்வதற்கும் திறைசேரி செயலாளரின் தலைமையிலான 5 நபர்களைக் கொண்ட அரச கடன் முகாமைத்துவ குழுவொன்று அமைக்கப்படவுள்ளது.

அந்த பணிகளுக்காக தேவையான மானியத்தை பெற்றுக்கொள்வதற்காகவும் நிதி அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.