இரத்தினக்கல் தொழில்துறை அபிவிருத்தி...

Friday, 18 October 2019 - 13:22

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF...
இரத்தினக்கல் தொழில்துறை அபிவிருத்தி தொடர்பில் இலங்கையும் வெனிசுவெலவும் கலந்துரையாடியுள்ளன.

வெனிசுவெலாவுக்கும் விஜயம் மேற்கொண்ட இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் குழுவிற்கும், அந்த நாட்டு ஜனாதிபதி நிக்கொலஸ் மடுரோவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இரத்தினக்கல் நிபுணர்களை அழைத்து வருவதன் மூலம், வெனிசுவேலாவில் இரத்தினக்கல் தொழில்துறையை அபிவிருத்தி செய்வதற்கான இலங்கை தரப்பினர் இதன்போது விருப்பம் தெரிவித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.