உலக பயண நிகழ்விற்கு இலங்கை அனுசரணையா...?

Sunday, 20 October 2019 - 13:38

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE...%3F
சர்வதேச சுற்றுலா பயணிகள் தொடர்பான சர்வதேச நிகழ்வொன்றை நடத்த முதன் முதலாக இலங்கை முன்வந்துள்ளது.

அடுத்த மாதம் லண்டனில் நடைபெறவுள்ள  இந்த உலக பயண நிகழ்விற்கு இலங்கை அனுசரணையாளராக செயல்படவுள்ளது.

இந்த அனுசரணைக்கான பெறுமதி இரண்டு லட்சத்து 75 ஆயிரம் ஸ்ரேலின் பவுண்ஸ் என மதிப்பிடப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த சர்வதேச விழாவிற்கு அனுசரணை செய்வதன் மூலம் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையினை அதிகரிப்பதுடன், கணிசமான அந்நிய செலாவணியினை பெற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து வீழ்ச்சி கண்டிருந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது வழமைக்கு திரும்பி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திட்டமிட்டது போல இந்த வருட பயணிகளின் எண்ணிக்கை 19 லட்சமாக உயரும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அதேவேளை, பணியகம் தற்போது, ஸ்கண்டனேவியா, அவுஸ்திரேலியா, சுவிஸ்சலாந்து, ஒஸ்ரியா, பினிலக்ஸ், போலந்து, செக் குடியரசு, ஹங்கேரி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இருந்து பயணிகளை கவர்வதற்கான பல்வேறு திட்டங்களை அமுல்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.