யாழ்-சென்னை இடையிலான பயணிகள் விமான சேவை நவம்பர் 1ஆம் திகதி ஆரம்பம்

Monday, 21 October 2019 - 7:59

%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+1%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான பயணிகள் விமான சேவை, எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

பொது விமான சேவைகள் அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.

இந்த போக்குவரத்துச் சேவையை ஆரம்பிப்பதற்கு சில விமான சேவை நிறுவனங்கள் தற்போது விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்த அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் குறித்த விமான சேவைகளை முன்னெடுக்கவும் இந்த நிறுவனங்கள் இணங்கியுள்ளன.

50 நிமிடம் முதல் ஒரு மணித்தியாலத்திற்குள் யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கான விமானப் பயணம் அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.