சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

Thursday, 07 November 2019 - 19:00

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22.5 சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த வீழ்ச்சி அவதானிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட 70 சதவீத சுற்றுலாத்துறை வீழ்ச்சியில் இருந்து படிப்படியாக மீண்டும் வருவதையும் அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஒக்டோபர் மாதம் 31ம் திகதிவரையில் இந்த ஆண்டில் இலங்கைக்கு மொத்தமாக 14 லட்சத்து 95 ஆயிரத்து 55 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்திருக்கின்றனர்.

இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைவிட, 20.7 சதவீதம் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.