இலங்கையின் ஏற்றுமதிகள் 20 சதவீதம் அதிகரிப்பு

Friday, 08 November 2019 - 12:45

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+20+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைக்கப்பெற்றதன் பின்னர், ஐரோப்பிய நாடுகளுக்கான இலங்கையின் ஏற்றுமதிகள் 20 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக ஆடை மற்றும் கடலுணவு ஏற்றுமதிகள் பாரிய அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளன.

அத்துடன், தேயிலை, டயர், இரத்தினகற்கள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் பாதணிகள் என்பவற்றின் ஏற்றுமதிகளும் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

2017ம் ஆண்டு மே மாதம் முதல் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு மீள வழங்கப்படுகிறது.

இதன்கீழ் சுமார் 6000 உள்ளுர் உற்பத்திகளுக்கு வரிச்சலுகை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.