இலங்கைக்கு வருகைதரவுள்ள சுற்றுலாப் பயணிகளின் கப்பல் ..

Sunday, 10 November 2019 - 8:23

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D+..
இத்தாலியை அடிப்படையாக கொண்ட  சுற்றுலா கப்பல் நிறுவனத்தின் சுற்றுலாப் பயணிகளின் கப்பல் இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் 1,739 சுற்றுலாப்பயணிகள் பயணிக்கவுள்ளதாக ஊழளவய ஊசரளைநள என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனம் தனது சுற்றுலாப்பயண கப்பல் நடவடிக்கைகளை கொழும்பிற்கும் விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதேபோன்று எதிர்வரும் சில வாரங்களில் சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட கப்பல்கள் இலங்கைக்கு வரவிருப்பதாக அந்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தமது நிறுவனம் தொடர்ச்சியாக இலங்கையின் சுற்றுலாத் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு இவ்வாறான சுற்றுலா பயணிகளுக்கான கப்பல் சேவைகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.