தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அதிகரிப்பு

Friday, 15 November 2019 - 8:47

%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
கடந்த ஒக்டோபர் மாதம் தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 57.6 சுட்டெண் பெறுமதிக்கு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
 
செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் உற்பத்தி மற்றும் புதிய கட்டளைகளில் ஏற்பட்ட அதிகரிப்பே இதற்கான முக்கிய காரணமாகும்.
 
உற்பத்தி மற்றும் புதிய கட்டளைகளில் அதிகரிப்பு, முக்கியமாக எதிர்வரும் பண்டிகை கால கேள்வியை பூர்த்தி செய்வதற்காக உணவு மற்றும் குடிபானத் துறையின் தயாரிப்பில் அவதானிக்கப்பட்டுள்ளது.
 
அதேவேளை, தொழில்நிலையும், உணவு மற்றும் குடிபானங்களின் தயாரிப்பு மற்றும் அணியும் ஆடைகள் துறைகளிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
 
எதிர்வரும் காலத்தில் ஏற்படக்கூடிய உயர்ந்த கேள்வியை ஈடுசெய்வதற்காக உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு புதிய ஊழியர்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டமையே இதற்கான முக்கிய காரணமாகும்.
 
கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் தயாரிப்பின் அனைத்து துணைச் சுட்டெண்களும் 50.0 என்ற ஆரம்ப அளவினை விஞ்சி, மீளாய்விற்குரிய காலப்பகுதியில் தயாரிப்பு நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த விரிவாக்கத்தினை சமிக்ஞைப்படுத்தியதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.