இலங்கை சுபீட்ச சுட்டெண் அதிகரிப்பு...

Friday, 15 November 2019 - 14:24

+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...
அனைத்து மாகாண சுபீட்ச சுட்டெண்களிலும் ஏற்பட்ட முன்னேற்றங்களின் காரணமாக 2018இல் இலங்கை சுபீட்ச சுட்டெண் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2018இல் இலங்கை சுபீட்ச சுட்டெண்  2017இல் பதிவுசெய்யப்பட்ட 0.548 இலிருந்து 0.783 இற்கு அதிகரித்துள்ளது.

இலங்கை சுபீட்ச சுட்டெண்ணின் அனைத்து மூன்று துணைச் சுட்டெண்களுமான பொருளாதார மற்றும் வியாபார சூழல், மக்கள் நலனோம்புகை, மற்றும் சமூக பொருளாதார உட்கட்டமைப்பு என்பன இந்த அதிகரிப்பிற்கு பங்களித்துள்ளன.

பொருளாதார மற்றும் வியாபார சூழல் துணை சுட்டெண் மேம்பட்டமைக்கு 2018ஆம் ஆண்டுப்பகுதியில் காணப்பட்ட விலை உறுதிப்பாடும் முறைசாராத் துறையின் கூலிகளில் ஏற்பட்ட அதிகரிப்பும் முக்கிய காரணங்களாக அமைந்தன.

மக்கள் நலனோம்புகைத் துணை சுட்டெண்ணைப் பொறுத்தவரை முக்கியமான மேம்பாடுகள், நலவசதிகள், கல்வியின் தரம், மக்கள் செல்வம் மற்றும் சூழல் தூய்மை ஆகிய அம்சங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

2018ஆம் ஆண்டில் சமூக பொருளாதார உட்கட்டமைப்பு துணைச் சுட்டெண்ணும் மெதுவாக அதிகரித்தமைக்கு மின்வலு, போக்குவரத்து மற்றும் தகவல் மற்றும் தொடர்பூட்டல் தொழில்நுட்பவியல் வசதிகள் என்பனவற்றின் கிடைப்பனவிலும் குழாய்வழி நீரின் தரத்திலும் ஏற்பட்ட முன்னேற்றங்களே முக்கிய காரணங்களாகும் என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.