சிங்கப்பூர் நிறுவனத்துடன் இலங்கை முதலீட்டு சபை ஒப்பந்தம்

Friday, 15 November 2019 - 19:19

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
சிங்கப்பூரை தளமாக கொண்டுள்ள நிறுவனம் ஒன்றுடன் இலங்கை முதலீட்டு சபை ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்கு அமைய ஹம்பாந்தோட்டை ஆழ்கடல் பிரதேசத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.

இதன் மூலம் நாளாந்தம் 4 லட்சத்து 20 ஆயிரம் பீப்பா சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயினை உற்பத்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் அனைத்தும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூகோள ரீதியாக இலங்கை சிங்கப்பூருக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையே அமைந்துள்ளமையினால், சிறந்த பலனை இலங்கை பெறும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஏற்றுமதி மூலம் வருடாந்தரம் 8 முதல் 9 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயாக பெற முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் ஆறாயிரத்து 500 இலங்கையர்கள் நேரடி வேலை வாய்ப்பினை பெறுவதுடன், மேலும் ஒரு கணிசமான எண்ணிக்கையினர் மறைமுகமாக திட்டத்தில் இணைவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.