பணவீக்கம் அதிகரிப்பு

Thursday, 21 November 2019 - 22:08

%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கையின் முதன்மை பணவீக்கம் 5.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.
 
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில், தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 5 சதவீதமாக பணவீக்கம் நிலவியது.

எனினும் இது உணவு மற்றும் உணவல்லா பொருட்களின் பணவீக்கத்துக்கு அமைவதாக 0.6 சதவீதத்தால் ஒக்டோபர் மாதத்தில் அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.