சிறிய அளவிலான வீழ்ச்சி

Wednesday, 04 December 2019 - 8:56

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
கொழும்பு பங்குச் சந்தையின் நேற்றைய பரிவர்தனை நடவடிக்கைகளில் சிறிய அளவிலான வீழ்ச்சிப் போக்கு பதிவாகி இருந்தது.

இதன்படி அனைத்து பங்குவிலைச் சுட்டெண் 0.24 சதவீதம் வீழ்ச்சி அடைந்து, 6,214.99 புள்ளிகளாக பதிவாகி இருந்ததுடன், S&P SL20 சுட்டெண் 3.86 புள்ளிகள் சரிவடைந்து 6228.77 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.

சந்தையின் மொத்தப்புரள்வாக 946.6 மில்லியன் ரூபாய் வெளிப்பட்டிருந்தது.

அதேநேரம், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கையின் நாணயப் பெறுமதியிலும் வீழ்ச்சிநிலை பதிவாகி இருந்தது.

நேற்றையதினம் நாணயசந்தையில் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 181.50-60 என்ற அடிப்படையில் இருந்தது.