அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்

Thursday, 05 December 2019 - 8:17

%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
விவசாய உற்பத்தியை அதிகரித்து நாட்டிலிருந்து வெளிச் செல்லும் அந்நியச் செலாவணியை எமது நாட்டின் விவசாய சமூகத்தினது வருமானமாக மாற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் அரசாங்கம் கோரியுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீனி, பால்மா, கோதுமை, வாசனை திரவியங்கள், மரக்கறி எண்ணெய், தானிய வகைகள், விலங்குணவுகள் மட்டுமன்றி அன்றாடம் பயன்படுத்தும் கிழங்கு, செத்தல் மிளகாய், பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், பயறு, உழுந்து, குரக்கன் போன்றவைகளும் வருடாந்தம் எமது நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.

அது மட்டுமன்றி மஞ்சள், புளி, தர்ப்பூசனி பழம், மாசி, நெத்தலி போன்ற பொருட்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இத்தகைய இறக்குமதிக்காக வருடாந்தம் ஆயிரத்து 781 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடுவதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உணவுப் பொருட்களை எமது நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியுமாக இருந்தால் இதுபோன்ற பெருமளவான அந்நியச் செலாவணியை செலவிட வேண்டிய அவசியம் இருக்காது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த உணவுப் பயிர்களை நாட்டில் உற்பத்தி செய்வதனால் எமது விவசாய சமூகத்திற்கு பெருமளவு வருமானம் கிடைப்பதுடன், அவற்றிற்கு பெறுமதி சேர்த்து கைத்தொழில் துறைகளின்மூலம் பெருமளவு தொழில் வாய்ப்புகளையும் கிராமப்புறங்களில் உருவாக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.