9.5 வீதத்தினால் வீழ்ச்சி..

Thursday, 05 December 2019 - 13:36

9.5+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF..
கடந்த வருடம் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் நவம்பர் மாதம் இலங்கைக்கு வருகைதந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 9.5 வீதத்தினால் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு இலட்சத்து 95 ஆயிரத்து 582 வெளிநாட்டு சுற்றலா பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 984 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.