புதிய வர்ததக நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டம்

Friday, 06 December 2019 - 19:58

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
திருகோணமலை துறைமுகத்தின் ஊடாக புதிய வர்ததக நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து தற்போது திட்டமிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான திட்ட வரைவுகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாக துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஜப்பானிய நிதி உதவியுடன் திருகோணமலை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்ட நிலையில், தற்போது சரக்கு கையாளும் நடவடிக்கைகள் இரவு நேரத்திலும் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பில்லியன் ஜப்பானிய நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த அபிவிருத்தி திட்டத்தின் 95 சத வீதமான பணிகள் நிறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த வாரத்தில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஊடாக 18 ஆயிரத்து 288 வாகனங்கள் தரையிறக்கப்பட்டன.

அவற்றில் 16 ஆயிரத்து 830 வாகனங்கள் மீள வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.

மிகுதியான ஆயிரத்து 458 வாகனங்கள் உள்ளுர் பாவனைக்கு ஈடுபடுத்தப்படும்.

அதேவேளை, 2019ஆம் ஆண்டில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஒரு மில்லியன் மெட்ரிக் தொன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.