சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி...

Saturday, 07 December 2019 - 19:53

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF...
கடந்த மாதம் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 9.5 சத வீதமாக  வீழ்ச்சியடைந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு அமைய கடந்த மாதம் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 984 பயணிகள் வருகை தந்துள்ளனர்.

கடந்த வருடம் நொவம்பர் மாதம் இலங்கைக்கு ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 582 சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் காரணமாகவே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறிப்பாக அடுத்த வருடம் முதல் அதிகரிக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.