வெளிநாட்டு நிறுவனங்களையும் இணைக்கும் நடவடிக்கை...

Sunday, 08 December 2019 - 13:29

+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88...
கொழும்பு பங்கு சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்களையும் இணைக்கும் நடவடிக்கைகள் முனைப்புடன் மேற்கொள்ளப்படுவதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பங்கு சந்தையில் இணைய விரும்பும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கு சந்தை பரிவர்தனை நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு நாணயங்களின் ஊடாகவே மேற்கொள்வர்.

வெளிநாட்டு நிறுவனங்கள் நானாவித ஏற்றுக்கொள்ளப்பட்ட பலம் வாய்ந்த நாணயங்களின் ஊடாக இலங்கை பங்கு சந்தையில் பங்கு கொள்ளும் திட்டம் கடந்த 2016 ஆண்டு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது பல மாலைதீவு மற்றும் பங்களாதேஷ் நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளன.

கொழும்பு பங்குச் சந்தையில் இணைய விரும்பும் வெளிநாட்டு நிறுவனங்கள், முதலில் தமது நாட்டு பங்குச்சந்தைகளில் பதிவு செய்யவேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாக உள்ளது.

இந்த நிலையில், புதிய அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கொழும்பு பங்கு சந்தையின் பரிவர்தனை நடவடிக்கைகள் உயர் நிலையில் உள்ளதாக பங்கு சந்தையின் தலைவர் ரே அபயவர்தனா தெரிவித்துள்ளார்.