தரப்படுத்தப்பட்ட 20 நாடுகளில் இலங்கை முன்னிலை

Tuesday, 10 December 2019 - 8:01

%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+20+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88
தற்போதைய குளிர் காலத்தில் பயணிக்க வேண்டிய தரப்படுத்தப்பட்ட 20 நாடுகளில் இலங்கை முன்னணியில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டுபாய், ஐக்கிய அரபு ராட்சியம், ஹனோய், வியட்நாம், சென் லூசியா, தாய்லாந்தில் உள்ள சமூய், பேருவில் உள்ள லீமா உள்பட 20 நாடுகளில் முதன்மையான தரத்தை இலங்கை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நீர் விளையாட்டுக்களில் ஆர்வம் உள்ள சுற்றுலா பயணிகள் இலங்கையை நாடுவது சிறப்பென அமெரிக்க சஞ்சிகை ஒன்றில் வெளியிடப்பட்ட கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள கலாச்சார தொன்மை வாய்ந்த சிகிரியா, தம்புள்ளை, தேயிலை பெருந்தோட்டங்கள், கடற்கரைகள் குறித்த விபரமான விளக்கங்கள் இந்த கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அடுத்த வருடம் முதல் இரண்டு மாதங்கள் மிகவும் சுவாத்தியமானதும், நானாவித பொழுது போக்குகளையும் கொண்ட காலம் என அந்த கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.