வரிகள் குறைக்கப்பட்டமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் கருத்து

Saturday, 14 December 2019 - 12:57

%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
பெறுமதி சேர் வரி மற்றும் ஏனைய வரிகள் குறைக்கப்பட்டதால் ஏற்படும் நன்மைகளை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் சேமநல இராஜாங்க அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா இதனை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பெறுமதி சேர் வரி மற்றும் ஏனைய வரிகள் குறைக்கப்பட்டிருப்பதால் அதனுடன் சம்பந்தப்பட்ட பொருட்களின் இறக்குமதிக்கான விலையும் குறைவடையும்.

இதனால் பல பொருட்களின் விலைகள் குறைவடையவுள்ளன.

இது தொடர்பில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளதுடன் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பெறுமதி சேர் வரி மற்றும் இதர வரி குறைப்புக்கான நன்மைகள் பொது மக்களை சென்றடைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.